திருவண்ணாமலை நகரத்தில் தூய்மை அருணை என்கிற இயக்கம் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரத்தில் உள்ள 40 வார்டுகளில் ஒரு ஆண்டுக்கு இருபத்தைந்து பேர் என்கிற கணக்கில் ஆயிரம் பேர் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதி போன்ற இடங்களில் வாரம் ஒருநாள் தூய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். மாடவீதிகளில் மற்றும் நகர மார்க்கெட் பகுதிகளில் தினசரி தூய்மை பணியில் ஈடுபடுகின்றனர். மூன்று ஆண்டுகளாக செயல்படும் இந்த அமைப்பு முறைப்படி மட்டுமல்லாமல் நகரத்தையும் நகரத்திலும் ஆயிரக்கணக்கான மரங்களையும் நட்டு பராமரித்து வருகின்றனர். தூய்மையான இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் இரண்டு முறை வருகை தந்து மரங்களை நட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 19 ஆம் தேதி நடிகர் விவேக் திருவண்ணாமலைக்கு வருகை தந்து தூய்மை அருணை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய நடிகர் விவேக், “இன்று எனது பிறந்த நாள். இந்த பிறந்தநாளை சிறப்பான வகையில் கொண்டாடப்பட வேண்டும் என நினைத்து திருவண்ணாமலை தொகுதியின் எம்எல்ஏ முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவை தொடர்பு கொண்டு நான் எனது பிறந்தநாளை நீங்கள் நடத்தும் தூய்மை அருமை இயக்கத்தினருடன் இணைந்து கொண்டாடலாம் என நினைக்கிறேன் என கூறினேன்.
அவரும் அதனை ஒப்புக் கொண்டார். அவர் சார்ந்துள்ள இயக்கம் இன்னும் சில மாதங்களில் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்பதை மதித்து என் பிறந்தநாளை பணியாளர்களோடு கொண்டாட ஒப்புக்கொண்டு அதனை ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ளது முழுமையான காற்று. உடலில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியமானது. ஒரு மனிதனின் தேவை சுத்தமான காற்று. அந்தக் காற்றை நமக்குத் தருவது மரங்கள்தான். நாம் நமது தாயின் வயிற்றில் பத்துமாதம் தான் இருக்கிறோம். அப்போது நேரடியாக பாதிப்பதில்லை. தாயை விட மரங்களை முக்கியம்” என உரையாற்றினார்.