Published on 07/06/2019 | Edited on 07/06/2019
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராஜ்யசபா சீட் யாருக்கு கிடைக்கும் என்று அதிமுக, திமுகவில் சீனியர்கள் போட்டி போட்டு கொண்டுள்ளனர்.இந்த நிலையில் அதிமுகவில் இது உச்ச கட்ட உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலவரப்படி அதிமுகவில் 3பேரை ராஜ்யசபா எம்.பி மூலம் தேர்வு செய்ய முடியும்.இதில் ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுக கூட்டணி கட்சியான பாமகவிற்கு கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.அதை உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ராஜ்யசபா சீட் கூட்டணி தர்மத்தின் படி பாமகவிற்கு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் இரண்டு ராஜ்யசபா எம்.பி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஏற்கனவே கட்சியின் சீனியர்கள் போட்டி போட்டு கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கட்சியின் சீனியரான தம்பிதுரையும் தற்போது எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எடப்பாடியும் தனக்கு நெருக்கமான டெல்லி அனுபவம் வாய்ந்த ஒருவரை அனுப்பலாம் என்று முடிவு செய்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.ஆகையால் தம்பிதுரைக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் ஓபிஎஸ் அணியில் இருக்கும் சீனியர்கள் தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது .