Skip to main content

அதிமுகவிற்கு பெரிய சவாலான வேலூர் தேர்தல்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்ட 38 தொகுதிகளில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவை சந்தித்தது. தனது வாக்கு வங்கியையும் இழந்தது. அதோடு அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில கூட வெற்றி பெறாதது கூட்டணியை மிகவும் பலவீனப்படுத்தியது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பண புழக்கம் அதிகம் நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. 

 

admk



நிறுத்தப்பட்ட  வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேலூர் இடைதேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். இந்த நிலையில் திமுக கோட்டையான வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வேலூர் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகமாக இருப்பதால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு அவர்களுடைய வாக்குகளை பெறுவது சற்று கடினம் என்று கூறிவருகின்றனர். 


வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் நன்மதிப்பை அதிமுகவால் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெற அழுத்தம் கொடுக்க முடியாத சூழலும் வரும் என்று தெரிவிக்கின்றனர். இதனால் வேலூர் தொகுதியில் இருக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினரை இழுக்க அதிமுக முயற்சி எடுத்து வருகிறது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் வேலூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் தேர்தல் பொறுப்பாளர்களாக 209 பேரை அதிமுக நியமித்துள்ளது. அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வேலூர் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு கடந்த தேர்தலை விட குறைவாக இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.    

சார்ந்த செய்திகள்