







நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, இன்று (01-04-24) காலை தென்சென்னை மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் சென்னை தி.நகர் தொகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு, அவர் தி.நகர் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
படங்கள்: எஸ்.பி.சுந்தர்