Published on 26/02/2025 | Edited on 26/02/2025

கன்னியாகுமரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு திடீரென ஏற்பட்ட கோளாறால் நடுக்கடலில் குடை சாய்ந்த நிலையில் அதில் பயணித்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் விசைப்படகு ஒன்றின் அடிப்பகுதியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் கடல் நீர் படகுக்குள் புகுந்ததால் படிப்படியாக குடை சாய்ந்து மூழ்கும் தருவாயை எட்டியது. திக் திக் என ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு படகில் இருந்த மீனவர்கள் எப்படி தப்பிப்பது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு வந்த மற்ற மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் 20 மீனவர்களையும் பத்திரமாக காப்பாற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.