Skip to main content

மத்தியில் யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

 

டுடே சாணக்கியா நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 340 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 70 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 133 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சி.என்.என். நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 336 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 82 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 124 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

narendra modi rahul gandhi


 

டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 306 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 132 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 104 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஜன்கிபாத் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 305 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும், பிற கட்சிகளுக்கு 113 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

என்.டி.வி. கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 302 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 தொகுதிகளிலும், இதர கட்சிகளுக்கு 112 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 286 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 122 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 134 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஏபிபி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 267 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 127 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 148 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 242 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 164 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 136 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சி-ஓட்டர் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு 287 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 128 இடங்களும், பிற கட்சிகளுக்கு 127 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 


நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. கடைசி மற்றும் 7-வது கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப்பதிவு நடந்தது.
 


542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முடிவுகள் வெளியாகும் போது தான் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது உறுதியாக தெரிய வரும்.
 

 

 

சார்ந்த செய்திகள்