தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார். காலம் குறைவாக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று கூறியிருந்தார். அதே போல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரசிகர்களை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசும் போது, எனக்கு பணம் புகழ் வேண்டாம். நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள் என்று கூறினார். மேலும் என்னைத் தேடி 1996- ஆம் ஆண்டே பதவி வந்தது. 45 வயதில் பதவிக்காக ஆசைப்படாத நான் 65 வயதிலா ஆசைப்படப் போகிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடுவார்கள் என்று கூறியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனையடுத்து கட்சியின் பெயரை பெரிய மாநாடு மாதிரி நடத்தி அறிவிப்பார் என்று கூறிவருகின்றனர். மேலும் கட்சியை ஆரம்பித்த கையோடு கட்சி கொள்கைகள், பிரச்சாரங்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்த நற்பணிகளை மக்களிடம் எடுத்து காட்ட சொந்தமாக ஒரு தொலைக்கட்சியையும் ஆரம்பிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதற்கான பணிகளையும் இப்போது இருந்தே ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறிவருகின்றனர். இன்னும் சிலர் ரஜினி டிவி சேனல் ஆரம்பித்தால் அதற்கு தலைவர் டிவி அல்லது ராகவேந்திரா டிவி அல்லது பாபா டிவி என்று பெயர் வைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.