



கரூரில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, சின்னசாமி, கே.சி.பி, நன்னீயூர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய கரூர் திமுக மாவட்ட பொருப்பாளர் செந்தில் பாலாஜி, ''கடந்த 2 எம்.பி. தேர்தலில் தம்பிதுரைக்கு ஆதரவாக உங்களிடம் ஓட்டு கேட்டதற்காக கரூர் மக்கள் முதலில் என்னை மன்னிக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க சொல்லி தம்பிதுரை தன் கட்சிகார்களிடம் பேசியிருக்கிறார். எனவே அதிமுக சார்பில் ஆயிரம் ரூபாய் குறைவாக பணம் கொடுத்தால் வாங்காதீர்கள்.
தம்பிதுரைக்கு சொந்தமாக 45 கல்லூரிகள் உள்ளன. இதில் கரூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு மாணவனுக்காக இலவச கல்வி கொடுத்திருப்பாரா? கோயில் கும்பாபிஷேகம் என்று கேட்டால் கூட ரூபாய் 5000 மட்டுமே கொடுப்பார்.
அதுவும் கோயிலுக்கு வந்து தருகிறேன் என்பார் .ஆனால் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் அந்தத் கஜா புயல் பாதிக்கப்பட்ட தொகுதியில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 48 கோடி கல்வி நிதியை தள்ளுபடி செய்துள்ளார்'' என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், கல்வித் தந்தையும் கரூர் வேட்பாளருமான தம்பிதுரையை வில்லங்கத்திலும் சிக்க வைத்துள்ளார்!