இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியாகி வருகிது. இடையில் சில நாட்களில், 4 லட்சம் பேருக்கும் கரோனா உறுதியானது. மேலும் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது எதனால் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பான கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பால்ராம் பார்கவா, "இரண்டாவது அலையில் இளைஞர்கள் சற்று அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் வெளியே செல்வது ஒரு காரணம். மேலும், நாட்டில் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனா, அவர்களையும் பாதிப்பது ஒரு காரணமாக இருக்கலாம்" என கூறியுள்ளார்.