Skip to main content

முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்... சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குபதிவு!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019


தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் ஹைதரபாத்தின் பேகம்பட்டில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு சந்திரசேகர் ராவ் 10 நாய்கள் வளர்ந்து வருகிறார். இதில் 11 மாத நாய் ஹாஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போனது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் அந்த நாயால், பால் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டு உள்ளது. இதையடுத்து முதல்வரின் இல்லத்தில் இருந்து நாயை தூக்கிக்கொண்டு பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு புதன்கிழமை கொண்டு சென்று இருக்கிறார்கள். அங்கிருந்த கால் நடை மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், ஊசி போட்டு சிகிச்சை அளித்தார்கள். ஆனால் நாய் ஹாஸ்கி சிகிச்சை பலன் இன்றி இறந்த போனது.

 

dh



இந்நிலையில் முதல்வர் இல்லத்தில் நாய்களை பராமரித்து வந்த அஸிப் அலிகான் அளித்த புகாரை ஏற்று போலீசார் கால் நடை மருத்துவர்கள் லட்சுமி மற்றும் ரஞ்சித் ஆகியோர், மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாய்களை பராமரித்து வந்த அஸிப் அலிகான், மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால், நாய் இறந்து விட்டதாக புகார் அளித்து உள்ளார். இந்த விவகாரம் தெலுங்கானா மாநில மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் நடவடிக்கை கொடூரமான செயல் என கடுமையாக விமர்சித்துள்ளன.

 

சார்ந்த செய்திகள்