Skip to main content

பயங்கரவாதி ஒருவர் கைது! சுதந்திரதின தாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு!!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
jamu

 

 

 

சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதி ஒருவனை ஜம்மு போலீசார் கைது செய்துள்ளனர். 


அண்மையில் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்தது. புர்ஹான் வானி உள்ளிட்ட ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத இயக்க கமேண்டோக்கள்  கொல்லப்பட்டதுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் புதுடெல்லியில் உள்ள நகரத்தின் முக்கிய இடங்களில் நடக்கவிருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் ஜூலை-19 ஆம் தேதி முதலே பாதுகாப்பு பணிகளை தொடங்கி கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். 

 

 

இந்நிலையில் நேற்று இரவு ஜம்மு மாநிலம் காந்திநகர் சோதனை சாவடியில் ஒரு வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர். அவனை விசாரித்ததில் அவனிடம் இருந்து  8 கையெறி குண்டுகளும், ரூ.60 ஆயிரம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. அவனிடம் மேலும் மேற்கொண்ட விசாரணையில் ர்பான் ஹசன்வானி என்பதும், புல்வாமா மாவட்டம், அவந்திபுரா நகர் அருகே உள்ள டான்ஜெர் என்ற இடத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக புதுடெல்லியில் சுதந்தரதினத்தில் தாக்குதல் நடந்தியிருப்பான் அவனது சதித்திட்டம் முறியடிக்கபட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

சார்ந்த செய்திகள்