
மேற்குவங்கத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு கிடைத்த 52 கிலோ எடையுள்ள ஒரு மீனால் லட்சாதிபதி ஆகியுள்ளார்.
மேற்குவங்கத்தின் சாகர் தீவில் உள்ள சாக்புல்டுபி கிராமத்தில் வசிக்கும் புஷ்பா கர், என்ற பெண்ணுக்கு அண்மையில் அப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து ஒரு மீன் கிடைத்துள்ளது. நீரில் மீன் மிதந்து வருவதைக் கண்ட அந்த பெண், ஏதாவது சிறிய மீனாக இருக்கும் என நினைத்து அதனைப் பிடிக்க முற்பட்டுள்ளார். ஆனால், அது சுமார் 52 கிலோ எடையுள்ள போலா மீனாக இருந்துள்ளது. ஆற்றில் பிடிக்கப்பட்ட இந்த மீனானது ரூ. 3,00,000 -க்கு விற்கப்பட்டுள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். உள்ளூர் சந்தையில் இந்த மீன் ஒரு கிலோ ரூ.6,200க்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் சம்பாதித்து கொடுத்த இந்த மீன் தனக்கு கிடைத்த அதிஷ்டம் என கூறியுள்ளார் புஷ்பா கர்.