Skip to main content

“அரசியல் சாசனத்தை வழங்கிய அம்பேத்கருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்” - குடியரசுத் தலைவர் உரை

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

 "We should be grateful to Ambedkar for giving us a political charter" - President Draupadi Murmu's speech

 

74வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

 

அவரது உரையில், ''நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம். மகாத்மா காந்தியின் குறிக்கோளின் படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ககன்யான் திட்டம் மூலம் இந்தியா மனிதர்களை ஏற்றிச் சொல்லும் விண்ணூர்தியை விண்ணில் ஏவ உள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. நமது நாகரீகம் மிகவும் பழமையானது. அதே நேரத்தில் நமது நவீன ஜனநாயகம் மிகவும் இளமையானது.

 

மத்திய அரசின் பல திட்டங்கள் ஏழை எளியவர்களுக்கு பலன் தருவதாக உள்ளன. கரிப் கல்யாண் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரணம் வழங்கி உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வை நாட்டை நம்பிக்கையான தேசமாக மாற்ற வழிவகுத்தது. நமது அரசியல் சாசனம் கடந்த காலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் என எப்போதுமே வழிகாட்டியாகவே இருக்கிறது. நமது அரசியல் சாசனத்தை வழங்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாம் என்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். நமது அரசியல் சாசனத்தை பின்பற்றுவது நமது கடமை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்