Skip to main content

'பெகாசஸ்' விவகாரம்! - விசாரணைக்கு மத்திய அரசு சம்மதம்!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

gh

 

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டுத் தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில், இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை விசாரிக்க வல்லூநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்