Skip to main content

விவசாயிகள் போராட்டம்: கடிதம் எழுதிய அமெரிக்க எம்.பிகள்!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020
farmers

 

 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 31 வது நாளை எட்டியுள்ளது. ஏற்கனவே கனடா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சனையில் தலையிடுமாறு தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

 

இந்தநிலையில் தற்போது, அமெரிக்காவின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் விவாதிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு  கடிதம் எழுதியுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் உறுப்பினர் பிரமிலா ஜெயபாலும் இதில் அடங்குவார்.

 

அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக, தற்போதுள்ள சட்டத்திற்கு இணங்க, தேசிய கொள்கையை தீர்மானிக்கும் இந்திய அரசின் உரிமையை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், பல இந்திய விவசாயிகள் தங்கள் பொருளாதார பாதுகாப்பு மீதான தாக்குதலாகக் கருதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தற்போது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் போராட்டம் நடத்துபவர்களின் உரிமையையும் நாங்கள் மதிக்கிறோம். இந்த  வேளாண் சட்டங்களை தங்களுக்கு எதிரானது என்று கூறும் விவசாயிகள், புதிதாக இயற்றப்பட்ட சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார  விலை முறையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் தங்களை பெரும் நிறுவனங்களின் தயவில் விட்டுவிடும் என குற்றம் சாட்டுகிறார்கள்

 

பல அமெரிக்க வாழ் இந்தியர்கள், பஞ்சாபில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூதாதையர் நிலங்களைக் கொண்டிருப்பதால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் இந்தியாவில் தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளனர். இந்த கடுமையான சூழ்நிலையைப் பார்க்கும்போது, வெளிநாடுகளில் அரசியல் பேச்சு சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த உங்கள் இந்திய பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்