Published on 10/10/2018 | Edited on 10/10/2018

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்குவதாக மத்திய அமைச்சரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. 11.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இந்த போனஸ் அறிவிப்பால் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ரூ.2044.31 கோடி இந்த அறிவிப்பால் செலவாகும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.