குஜராத்தில் ராகுல் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அப்போது தனீரா பகுதியில், சிலர் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பன்ஸ்கந்தா என்ற இடத்திற்கு ராகுல் வந்தபோது, அவரது கார் மீது திடீரென சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ராகுலுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில், பாதுகாவலர் ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.