கர்நாடகா மாநிலம் பெங்களூர்வின் புறநகரில் உள்ல யெலஹங்காவில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றவுள்ளது. ஏரோ இந்தியா நடத்தும் இந்த கண்காட்சியை கருத்தில் கொண்டு, ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகள் மற்றும் அசைவ ஹோட்டல்கள் மூட பெங்களூரு சிவில் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், ஏரோ இந்தியா-2025 நிகழ்ச்சி யெலஹங்காவின் விமானப்படை நிலையத்தில் 10.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவு வரை அசைவ உணவுகளை பரிமாறுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. பொது இடங்களில் அசைவு உணவுகள் இருப்பதால் அதை உண்பதற்காக பறவைகள் வருகின்றன. நடுவானில் விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏரோ இந்தியா ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்ட 14 விமானக் கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய 15வது விமானக் கண்காட்சியான ஏரோ இந்தியா 2025 பெங்களூவில் நடைபெறவுள்ளது.