Skip to main content

பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Great fall in stock markets!

 

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. 

 

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் தொடர்ந்து, பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டதால் வர்த்தக முடிவில் 1070 புள்ளிகள் வீழ்ச்சிக் கண்டிருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 348 புள்ளிகள் சரிவுக் கண்டது. பணவீக்கம் உயர்வு, அந்நிய முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு விலகி நின்றது ஆகியவை சரிவுக்கு காரணமாகின. 

 

அதோடு, ஐரோப்பிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து வருவதும், ஆஸ்திரியாவில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதும் சர்வதேச சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்துத் துறை பங்குகள் விலையும் சரிவுடன் வர்த்தகமான நிலையில், கட்டண உயர்வை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மட்டும் விலை அதிகரித்தது.

 

 

சார்ந்த செய்திகள்