சூனியம் வைத்ததாகக் கூறி 77 வயது மூதாட்டியை கிராம மக்கள் தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி பகுதியில் உள்ள ரெத்யகேடா கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி சூனியம் வைத்ததாகக் கூறி அந்த கிராமத்தினர் தாக்கியுள்ளனர்.
வேலை நிமித்தமாக வெளியீர் சென்றிருந்த பாதிக்கப்பட்டவரின் மகனும் மருமகளும், இந்த சம்பவத்தை அறிந்து போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் சூனியம் வைத்ததாகக் குற்றம் சாட்டி அங்கிருந்த இழுத்துச் சென்றுள்ளனர். கிராம மக்கள், அந்த மூதாட்டியை மரத்தடியால் தாக்கி அறைந்துள்ளனர். மேலும், அவரது கைகள் மற்றும் கால்களில் சூடான இரும்பு கம்பிகளை வைத்து சூடு வைத்துள்ளனர். இதையடுத்து, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கச் சொல்லியும், நாய் மலத்தை குடிக்கச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, அவரது கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 77 வயது மூதாட்டியை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.