சிஎம்ஐஇ (CMIE) என்ற அமைப்பு ஆண்டு தோறும் இந்திய பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வேலைவாய்ப்பின்மை 5.9 சதவிகிதமாக இருந்ததாகவும், அதே இந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலைமைப்படி வேலைவாய்ப்பின்மை 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018-ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலை இழப்புகள் குறித்த புள்ளிவிவரம் தங்களிடம் இல்லை என அரசு தெரிவித்திருந்தது.