Published on 02/02/2021 | Edited on 02/02/2021
![ிுப](http://image.nakkheeran.in/cdn/farfuture/DgP72WRoGNNWuZ8Qag_F1U43cfTddPSrAI_rmsK0K7w/1612286801/sites/default/files/inline-images/0321_1.jpg)
மராட்டிய மாநிலத்தில், குடோன் இடிந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் தானே மாவட்டத்தில் பிவண்டி பகுதியில் பெரிய குடோன் ஒன்று அமைந்துள்ளது. இதில், விவசாயப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை அந்த குடோன் எதிர்பாராத வகையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 7 பேர் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர், நேற்று 5 பேரை பலத்த காயத்துடன் மீட்டனர். ஒருவர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.