Published on 08/01/2019 | Edited on 08/01/2019
மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் 111 மார்க்கங்களில் விமானங்களை இயக்க 15 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உடான் திட்டம் 2016-ம் ஆண்டு அனைவரும் விமானத்தில் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் நோக்கத்துடன் கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
உடான் திட்டத்திற்கு 3-வது கட்டமாக ஏலம் விடப்பட்டது. அதில் மொத்தம் 111 மார்க்கங்களில் விமானங்களை இயக்குவதற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஸ்பைஸ் ஜெட் 37 வழித்தடங்களிலும், இண்டிகோ 20 வழித்தடங்களிலும் விமானங்களை இயக்க விண்ணப்பித்துள்ளன. மேலும் கோதாவத் எண்டர் பிரைசஸ் நிறுவனம் 15 வழித்தடங்களில் விமானங்களை இயக்க விண்ணப்பித்துள்ளது.