Skip to main content

கேள்வித்தாளை லீக் செய்தது யார்? - குற்றவாளியை நெருங்கும் போலீஸ்

Published on 30/03/2018 | Edited on 30/03/2018

சி.பி.எஸ்.இ. தேர்வுக்கான கேள்வித்தாளை லீக் செய்த குற்றவாளியை நெருங்கிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

CBSE

 

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான தேர்வுகள் நடந்துமுடிந்துள்ள நிலையில், 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதவியல் பாடத்திற்கான கேள்வித்தாள்கள் லீக் ஆனதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் எனக் கூறியிருந்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம், இன்று மறுதேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள்களை லீக் செய்த குற்றவாளிகளை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தலைமை தேர்வு கட்டுப்பாட்டாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சி மையங்கள் என இதுவரை 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்களுக்கு மேல் லீக் ஆன கேள்வித்தாள்களை பயன்படுத்தியிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளியை நெருங்கிவிட்டதாகக் கூறும் டெல்லி காவல்துறை, கூடியவிரைவில் கைது செய்வோம் என அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்