![Suddenly the bus station caught fire; 9 buses burnt down](http://image.nakkheeran.in/cdn/farfuture/yiOld5SkI0AcrDcMQa3LhRptJMfzfu5xQGpWUlvd9G8/1688125235/sites/default/files/2023-06/we11104.jpg)
![Suddenly the bus station caught fire; 9 buses burnt down](http://image.nakkheeran.in/cdn/farfuture/CEgnXK1VcRDbCoy5IDdBcDpkPJbTvE-1dWoK-TGRiUU/1688125235/sites/default/files/2023-06/we11101.jpg)
![Suddenly the bus station caught fire; 9 buses burnt down](http://image.nakkheeran.in/cdn/farfuture/uogi_NijQlHOgCB88K0o0IxNYMRtjOPdhNs1J9-DjZI/1688125235/sites/default/files/2023-06/we11102.jpg)
![Suddenly the bus station caught fire; 9 buses burnt down](http://image.nakkheeran.in/cdn/farfuture/LjHWRVOm9RvX9ahNdPGBmjt4yNWdI0XC5_Vqqw-H7A8/1688125235/sites/default/files/2023-06/we11103.jpg)
Published on 30/06/2023 | Edited on 30/06/2023
பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அங்கிருந்த ஒன்பது பேருந்துகளும் தீப்பற்றி எரிந்த சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கத்கர்ஹா பேருந்து நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை வெளியாகாத நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.