Published on 29/06/2018 | Edited on 29/06/2018

மகாராஷ்டிராவில் தியேட்டரில் உணவு பொருளை அதிக விலைக்கு விற்றதாக தியேட்டர் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா புனேவில் உள்ள ஒரு திரையரங்கு ஒன்றில் இடைவேளையின் பொழுது விற்கப்படும் தின்பண்டங்களின் விலை எங்கேயும் இல்லாதா அளவிற்கு அதிகமாக விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் நிவநிர்வாண் சேவாவை சேந்தவர்கள் என்று கூறி அந்த திரையரங்கில் நுழைந்த அந்த சில நபர்கள் அந்த திரையரங்க உரிமையாளரை நிற்கவைத்து வசை பாடியது மட்டுமல்லாமல் அவரை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர்.
மேலும் அந்த திரையரங்க உரிமையாளரை தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.