
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ராகேஷ். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மூன்று பேரும் இஸ்கான் கோவில் அருகே உள்ள பிளே ஸ்கூளில் படித்து வந்துள்ளனர். அவர்களை காலையில் பள்ளிக்கு அழைத்து சென்று, மாலையில் வீட்டிற்கு திருப்பி அழைத்து வருவதை தொழிலதிபர் ராகேஷ் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்போது அந்த பள்ளியை நடத்திவரும் ஆசிரியர் ஸ்ரீதேவி(25) என்பவருடன் ராகேஷுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாகவும் மாறியிருக்கிறது. அதன் காரணமாக இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தான் பிளே ஸ்கூளை புதுப்பிக்க வேண்டும் என்று கடனாக ராகேஷிடம், ஸ்ரீதேவி ரூ.2 லட்சம் பணம் வாங்கியுள்ளார். பின்னாளில் அந்த பணத்தை ராகேஷ் திருப்பி கேட்டபோது, ‘பணம் இல்லை, அதற்கு பதில் பள்ளியில் நீங்களும் ஒரு பங்குதாரராக ஆகிக் கொள்ளுங்கள்’ என்று ஸ்ரீ தேவி கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து ராகேஷும் பள்ளி நிர்வாகத்தில் பார்ட்னராக மாறியிருக்கிறார்.
இதனிடையே தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி ராகேஷிடம் ரூ.4 லட்சம் வரை ஸ்ரீ தேவி பணம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தைத் திருப்பி கேட்டபோது, தனக்கு கொடுத்த ஒவ்வொரு முத்தத்திற்கும் ரூ.50 ஆயிரம் கழிந்து விட்டது என்று கூறிய ஸ்ரீ தேவி, ‘என்னுடன் தனிமையில் இருந்ததற்காக நீ தான் ரூ.15 லட்சம் தர வேண்டும்..’ என்று மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் ஸ்ரீதேவியுடன் பேசுவதையே நிறுத்தியிருக்கிறார்.

இருப்பினும் விடாத ஸ்ரீதேவி, “நாம் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன்; அப்படி வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்” என்று ராகேஷை மிரட்டியிருக்கிறார். அத்துடன் காதலர் சாகர் மற்றும் ரவுடி கணேஷுடன் சேர்ந்து ராகேஷை காரில் கடத்திய ஸ்ரீதேவி ‘பணத்தைத் கொடுத்தால் தான் விடுவிப்போம்’ என்று கறார் காட்டியிருக்கிறார். அதன்பிறகு ரூ.15 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம் என்று அந்த கூற, இறுதியாக ராகேஷ் அதற்கு ஒப்புக்கொண்டு முன்பணமாக ரூ.1.9 லட்சம் பணத்தை கொடுத்தவுடன் கோரகுண்டே பாளையத்தில் அவரை இறக்கி விட்டுவிட்டு மூவரும் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மன வேதனையடைந்த ராகேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஸ்ரீ தேவி, அவரது காதலர் சாகர் மற்றும் ரவுடி மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.