Published on 11/05/2021 | Edited on 11/05/2021
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. கரோனவை கட்டுப்படுத்த மஹாராஷ்ட்ரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்திலும் கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.
இருப்பினும் தெலங்கானா மாநிலத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனையடுத்து அம்மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிமுதல் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. அதேநேரத்தில், காலை 6 மணிமுதல் 10 மணிவரை பொருட்கள், காய்கறிகள் வாங்குவது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.