Skip to main content

மயானத்தில் அகோரி பூஜை; திடீரென வந்த வெளிச்சம் - அதிர்ந்துபோன கிராம மக்கள்!

Published on 19/03/2025 | Edited on 19/03/2025

 

Aghori Puja at midnight continue sand quarry operations near Chidambaram

சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் கொத்தட்டை சிலம்பங்கலம் அத்தியாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 6க்கும் மேற்பட்ட சவுடு மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் அரசு நிர்ணயத்தை அளவைவிட அதிக ஆழத்தில் மணல் அள்ளுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் காரணமாக சில மணல் குவாரிகள் விதிகளுக்கு மீறி செயல்பட்டதால் மூடப்பட்டது. பின்னர் மணல் குவாரி உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து இதனைச் சரி செய்து மீண்டும் மணல் குவாரியை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் அத்தியாநல்லூர் கிராமத்தில் இயங்கும் பாக்யராஜ் என்பவரின் மணல் குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதாலும், இதனால் அப்பகுதியில் நீர் வளம், விவசாய நிலம், நிலத்தடி நீர் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்து மணல் குவாரி நடத்துவதாக குற்றம் சாட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த மணல் குவாரி இயங்காமல் மூடப்பட்டு இருக்கிறது. 

Aghori Puja at midnight continue sand quarry operations near Chidambaram

இந்த நிலையில் மணல் குவாரியை தொடர்ந்து இயக்குவதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அத்தியாநல்லூர் கிராமத்தை ஒட்டியுள்ள மயானத்தில் நள்ளிரவில் அகோரியை  கொண்டு அடுத்த ஜாம பூஜை நடத்தியுள்ளனர். நள்ளிரவில் மயானத்தில் இருந்து அதிகம் வெளிச்சம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பூஜை செய்துகொண்டிருந்த அகோரியை பிடித்து விசாரித்துள்ளனர். 

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இந்த மணல் குவாரி சட்டத்திற்கு புறம்பாக ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து பாக்கியராஜ் என்பவர் மணல் குவாரியாக நடத்தி வருகிறார். இதனை கண்டித்தும் மணல் குவாரியை மூட வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டஓம். அதன் காரணமாக தற்போது மணல் குவாரி மூடப்பட்டுள்ளது.  இந்த மணல் குவாரி இயங்காததால் கையில் காசு பார்க்க முடியவில்லை என்று மணல் குவாரி தடையில்லாமல் இயங்குவதற்கு நள்ளிரவில் அகோரியை அழைத்து பூஜை செய்துள்ளனர். இது குறித்து அகோரியை பிடித்து விசாரித்தோம். அகோரி மணல் குவாரி உரிமையாளர் பாக்யராஜ் என்பவர் மணல் குவாரி நஷ்டம் இல்லாமல் இயங்குவதற்கு நள்ளிரவில் பூஜை செய்ய அழைத்ஹ்டு வந்ததாக கூறினார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகாரி அளித்தோம். ஆனால் புதுச்சத்திரம் போலீசார் மணல் குவாரி உரிமையாளர் பக்கியராஜ்  அகோரியை கிராம மக்கள் தாக்கியதாக  கொடுத்த புகாரின்  வழக்குப் பதிந்துவிடுவோம் என்று கூறி எங்களை மிரட்டுகிறார்கள். 

இதனால் தற்போது மணல் குவாரி மூடப்பட்டுள்ளது.  இந்த மணல் குவாரி இயங்காததால்  கையில் காசு பார்க்க முடியவில்லை எனவும் மணல் குவாரி எப்போதும் போல் தடையில்லாமல் இயங்குவதற்கு நள்ளிரவில் அகோரியை அழைத்து வந்து பூஜை செய்துள்ளனர். இதுகுறித்து அகோரியை பிடித்து விசாரணை செய்தோம் அகோரியும் மணல் குவாரி உரிமையாளர் பாக்யராஜ் என்பவர் மணல் குவாரி நஷ்டம் இல்லாமல் இயங்குவதற்கு நள்ளிரவில் பூஜை செய்ய அழைத்து வந்தார் எனக் கூறினார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மணல் குவாரியை நடத்த அனுமதி வழங்கவில்லை என்றால், போராட்டம் நடத்துபவர்கள் மீது வழங்குப் பதிவு செய்து சிலையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். 
 
மேலும் இப்பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக அதிக அளவு ஆழத்தில் சவுடு மணல்களை அள்ளி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறார்கள். அதனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்