Published on 19/05/2020 | Edited on 19/05/2020
கரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. இதற்கிடையில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைபடி இயங்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.