இந்தியா முழுவதும் பொறியியல் படித்த இளைஞர்கள் மற்றும் மற்ற துறையை தேர்ந்தெடுத்துப் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் தன் மாநில இளைஞர்களுக்கே தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டத்தை இயற்றியுள்ளது . இதனால் தமிழக இளைஞர்கள் கர்நாடகா மாநிலத்தில் தனியார் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு செல்லும் போது அந்நிறுவனத்தின் நேர்காணலின் போது எழுப்பப்படும் முதல் கேள்வி உங்களுக்கு கன்னடம் தெரியுமா? நீங்கள் கர்நாடகாவை சார்ந்தவர்களா? என நேர்காணலில் நம்மிடம் கேள்வியை எழுப்புக்கிறார்கள் . ஆனால் தமிழகத்தில் தனியார் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு சென்றால் ஆங்கிலம் தெரியுமா ? என கேட்கிறார்கள் .
இதனால் தான் தமிழக இளைஞர்கள் மத்திய அரசின் வேலை வாய்ப்பிலும் சரி , தமிழகத்திலுள்ள தனியார் வேலை வாய்ப்பிலும் சரி மற்ற மாநில இளைஞர்களே அதிக அளவில் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் . இது குறித்து சமீபத்தில் "ட்விட்டரில் ட்ரெண்ட்" ஆனது . அதில் " தமிழக வேலை வாய்ப்பு தமிழர்களுக்கே " என்ற தமிழக இளைஞர்களின் குரல் எதிரொலித்தது . ஆனால் தமிழக அரசும் , தமிழக தொழிற்துறை அமைச்சகமும் இது குறித்து கண்டுக்கொள்ளவில்லை . அதே போல் கர்நாடகாவை பின்பற்றி சட்டத்தை இயற்ற தயங்கும் தமிழக அரசு என்றே கூறலாம் . ஏனெனில் தமிழகத்தில் தற்போது அனைத்து மாநில இளைஞர்களும் தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர் . இதனால் உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர் . இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது . அதனைத் தொடர்ந்து பெயரளவில் மட்டுமே ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு . அதன் நிலை என்ன ? எத்தனை பேர் வேலை வாய்ப்புக்களை பெற்றுள்ளனர் என்ற விவரங்களை தமிழக அரசு ஏன் வெளியிடவில்லை என இளைஞர்கள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்புகிறார்கள் .
மேலும் இளைஞர்களின் வேலை வாய்ப்புயின்மையால் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கின்றனர் . எனவே தமிழக அரசு தமிழக தனியார் மற்றும் அரசு வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் , குறைந்த பட்ச ஊதியம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசை இளைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் . மேலும் இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும் என்று இளைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . இவ்வாறு தமிழக அரசு நடவடிக்கைள் எடுக்கும் பட்சத்தில் தமிழுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது .