Published on 05/12/2020 | Edited on 05/12/2020

கர்நாடகா மாநிலத்தில் 'மராட்டிய மேம்பாட்டு ஆணையம்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்தால் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதிக்கு தலமலை வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரில் உள்ள பாலகங்கதரநாத சுவாமிஜி உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாலும், போக்குவரத்து இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.