Published on 12/07/2019 | Edited on 12/07/2019
ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் (IMPS), என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற பணப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு முறை நெப்ட் அல்லது ஆர்.டி.ஜி.எஸ் செய்யும்போது ரூ.2.50 முதல் ரூ.56 ரூபாய் வரையிலான ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக பிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை எவ்வித கட்டணமும் இன்றி செய்துகொள்ளலாம் என ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.