Skip to main content

'கடும் மோதல்; தொடர் வெளிநடப்பு'- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Published on 09/08/2024 | Edited on 09/08/2024
nn

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும் திங்கட்கிழமை கூட்டத்தின் இறுதி நாளாக முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து வரும் நிலையில் இன்று மாநிலங்களவை தலைவரான குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருடன் சமாஜ்வாதி கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பும் செய்தனர்.

எதிர்க்கட்சிகளின்  வெளிநடப்பைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மாநிலங்களவை இரண்டு மணி; இரண்டரை மணி; மூன்று மணி என தொடர்ந்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் திங்கட்கிழமை வரை மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெறுவதாக இருந்த நிலையில் தற்போது மோதல் போக்கு காரணமாகவும் எதிர்க்கட்சிகளின் தொடர் வெளிநடப்பு காரணமாகவும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இனி சமூகமாக விவாதங்கள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியான நிலையில், ஜெகதீப் தங்கர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

 
News Hub