மஹாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய கன்னிவெடிகுண்டு தாக்குதலில் 15 கமாண்டோ படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தமாக 16 வீரர்கள் அந்த வேனில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த இடமான கட்சிரோலியில், இன்று கமாண்டோ படை வீரர்கள் சென்ற வேனை குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 15 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வேன் வரும் போது வெடித்ததில், வேன் தூக்கிவீசப்பட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பல வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, “மஹாராஷ்ட்ரா கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மேல் நடந்த இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்து பாதுகாப்பு வீரர்களுக்கும் என்னுடைய வீர வணக்கம். அவர்களுடைய தியாகம்மறக்க முடியாதது. இத்தகைய வன்முறையை நடத்திய குற்றவாளிகள் தப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார்.