உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இருந்தும் கரோனா வேகமாக மற்ற நாடுகளில் பரவி வருகிறது. உலகளவில் 3 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 60 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது மத்திய அரசு தளர்வுகள் அறிவித்த பின்பு பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளை திறந்துள்ளது. தற்போது உத்தரப்பிரதேசத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 19ம் தேதி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.