
இந்தி திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் திமுக சார்பில் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பாராட்டுதலுக்குரியது என விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதலமைச்சர் கூட்டி நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் நிதியை வழங்க மாட்டோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது. அதனால் இந்தி மொழியை திணிப்பதற்கு மத்திய பாஜக அரசு முயல்கிறது. அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் திமுக சார்பில் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பாராட்டுதலுக்குரியது.
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவறையை செய்தால் தமிழகத்தின் 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொகுதி வரையறை மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைய வேண்டும்” எனக்கூறினார்.