1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வெற்றி கண்டது. இதனைத்தொடர்ந்து போரில் தங்கள் இன்னுயிரைத் தந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கை 1972ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றி வைத்தார்.
இந்தநிலையில் கடந்த 21 ஆம் தேதி, இந்தியா கேட் முன்பு ஒளிந்துகொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கில் இணைக்கப்பட்டது. மேலும் இந்தியா கேட்டின் முன்பு ஒளிந்துகொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டது.
இந்தியா கேட்டின் முன்பு ஒளிந்துகொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. ராகுல் காந்தி, "சிலரால் தேசபக்தி மற்றும் தியாகத்தைப் புரிந்து கொள்ள முடியாது" என்று மத்திய அரசை விமர்சித்தார்.
இந்தநிலையில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சத்தீஸ்கரில், அமர் ஜவான் ஜோதிக்கு ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுவார் என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.