Published on 15/11/2018 | Edited on 15/11/2018

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் என்று கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கேரள அரசு அறிவித்துள்ளது.
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. கூட்டத்திற்குப் பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கேரள அரசு உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.