மெட்ரோ ரயில், அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், "மெட்ரோ மற்றும் அரசு பேருந்து கட்டணம் காரணமாக பல பெண்கள் வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவர்கள் சம்பாதிக்கும் சிறிய தொகையும் வீணாகிறது. இத்தனை தடுக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பான மற்றும் பணமற்ற பயணத்தை டெல்லி பேருந்து மற்றும் மெட்ரோவில் மேற்கொள்ளலாம். இதற்காக மத்திய அரசுடன் பேசினோம். மொத்த செலவில் மாநில அரசும், மத்திய அரசும் பாதிப்பாதி என பிரித்து கொள்ளலாம் என. ஆனால் மத்திய அரசு இதற்கு ஒப்புக்கொள்ளாததால் முழு செலவையும் மாநில அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. இதில் அவர்களின் உதவி நமக்கு தேவை இல்லை.
டிக்கெட் எடுக்குமளவு வசதி இருக்கும் பெண்கள் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அனால் டிக்கெட் எடுக்க முடியாதவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இது குறித்த ஒரு வாரத்திற்குள் திட்ட வரையறை தயார் ஆகிவிடும். இன்னும் 2 மாதங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்" என தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திட்டம் தற்போது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.