கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் உயர்கல்வி அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்திற்குப் பின் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், முதலாம் ஆண்டு, இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இறுதி ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் லாசர் அறிவித்துள்ளார்.
இதில் இறுதி ஆண்டு மாணவர்களின் செய்முறைத் தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு (Internal) மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.