Published on 12/11/2019 | Edited on 12/11/2019
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார். இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும்.
எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமது பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.