இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் இன்று (23/03/2020) மாலை 05.00 மணி முதல் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகளும் இன்று (23/03/2020) மாலை 06.00 மணி முதல் மார்ச் 31- ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று (23/03/2020) இரவு 09.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். தங்களை தனிமைப்படுத்துவதில் புதுச்சேரி மக்கள் அலட்சியமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். புதுச்சேரியில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் செல்லவும் அரசு தடை". இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார்.