
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் பூத் கமிட்டி மாநாட்டிற்கான தீவிர பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (11/04/2025) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மண்டலங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத்கமிட்டி மாநாடு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக கோவையில் இருந்து பூத்கமிட்டி மாநாடு தொடங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் மைதானத்தை பார்வையிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.