Skip to main content

விபத்தில் சிக்கியோருக்கு உதவினால் 5000 ரூபாய் சன்மானம்..!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

 

pudhucherry budget

 

 

2019 -20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதில் சிறுதானிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2000 ஆயிரம் வழங்குவது, மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக நீட் பயிற்சி மையங்கள் அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு , விவசாய தொழில் தொடங்க  5 லட்சம் ரூபாய் கடன் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார். அதேபோல சாலை விபத்தில் காயமடைவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபர்களுக்கு ரூ.5000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்