தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பொங்கல் கொண்டாடியுள்ளார். டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய மோடி, ‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ என்ற குறளை மேற்கோள்காட்டி ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.