Skip to main content

குளிர்காலத்திற்குப் பிறகு  பெட்ரோல் டீசல் விலை குறையும் - பெட்ரோலியத்துறை அமைச்சர் பதில்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

petrol price came down when winter goes away says petroleum minister dharmendra pradhan

 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள், பெட்ரோல் மீதான வரியைக் குறித்து பெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ரிசர்வ் வங்கி ஆளுநரும் பெட்ரோலிய பொருட்கள் மீதான மறைமுக வரியை, மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்தும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது குறித்தும் சமீபத்தில் பதிலளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சர்வதேசச் சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான நுகர்வோர் விலை உயர்ந்துள்ளது. இது படிப்படியாகக் குறைந்துவிடும். கரோனாவால் உலகளாவிய விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. “பெட்ரோலியப் பொருட்களைத் தங்கள் வரம்பிற்குள் சேர்க்குமாறு, ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். அது மக்களுக்குப் பயனளிக்கும். ஆனால், முடிவெடுக்க வேண்டியது (ஜி.எஸ்.டி கவுன்சில்) அவர்கள்தான்" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை குளிர்காலத்திற்குப் பிறகு குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "சர்வதேசச் சந்தையில் பெட்ரோலிய விலை அதிகரிப்பு நுகர்வோரையும் பாதித்துள்ளது. குளிர்காலம் முடியும்போது விலைகள் கொஞ்சம் குறையும். இது ஒரு சர்வதேச விஷயம், தேவை அதிகரித்துள்ளதால் விலை அதிகமாகியுள்ளது. இது குளிர்காலத்தில் நடப்பதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.

 


 

 

சார்ந்த செய்திகள்