Skip to main content

வயது வெறும் நம்பர் மட்டுமே! - தன்னம்பிக்கை குறையாத ‘சூப்பர் பாட்டி’ (வீடியோ)

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

அன்றாட வாழ்க்கையைக் கடத்த எந்திரங்களைப் போல ஓடவேண்டிய கட்டாயம் வந்துவிட்ட இந்தக் காலத்தில், இயலாத சூழலிலும் தன்னம்பிக்கையாக உழைக்கும் பாட்டி வயது வெறும் நம்பர் மட்டுமே என்பதை நிரூபித்திருக்கிறார்.
 

grandma

 

 

 

மத்தியப்பிரதேசம் மாநிலம் செஹோரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன் மக்கள் கூட்டம் வரிசையாக நிற்கிறது. நடுவே ஒரு பழைய டைப் ரைட்டர் எந்திரத்தில் அதிவேகமாக டைப் செய்து கொண்டிருக்கிறார் அந்த 72 வயது லட்சுமி பாய் பாட்டி. இது தொடர்பான வீடியோ காட்சியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எனக்கு இவர்தான் சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேசம் மாநிலம் செஹோரில் வசிக்கும் இவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. வேகம் மட்டுமின்றி எந்த வேலையும் குறைந்ததில்லை மற்றும் கற்றுக்கொள்ள வயது ஒரு தடை இல்லை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்’ என பதிவிட்டுள்ளார். 
 

செஹோர் மாவட்ட கலெக்டர் உதவியுடன் டைப் ரைட்டிங் வேலைசெய்து வாழ்க்கையை நடத்தும் லட்சுமிபாய், பிச்சை எடுத்து என்னால் கடனை அடைக்கமுடியாது. அதனால்தான் உழைக்க வந்துவிட்டேன். விபத்தில் சிக்கிய என் மகளை பராமரிக்கவும் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி பதிவிட்ட சேவாக்கிற்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்