Published on 06/06/2022 | Edited on 06/06/2022
![Parents tie baby in shop shutter ... viral video!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KUKOR04ReWr55O6gn9XznMj8xK_hj6KAfLB0qJPFink/1654481604/sites/default/files/inline-images/b2_12.jpg)
புதுச்சேரியில் வேலைக்குச் செல்லும் தம்பதியினர் ஒருவர் தங்களது குழந்தையை கடையின் ஷட்டரில் கட்டிப்போட்டு விட்டு சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் மிஷன் ஸ்ட்ரீட்டில் கைகளில் பொருட்களை ஏந்தி வியாபாரம் செய்ய வந்த பெற்றோர் அங்குள்ள கடையின் ஷட்டரில் தங்களது மகனை கயிற்றால் கட்டிவிட்டு மற்றொரு குழந்தையை அந்த குழந்தைக்கு துணையாக இருக்கும்படி கூறிவிட்டு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தைகளை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த காட்சிகள் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.