Skip to main content

‘மறுபடியும் முதல்ல இருந்தா...’ - விமான நிலையத்தில் கோவிட் பரிசோதனைக்கு உத்தரவு

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

ரக

 

கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி கோடிக்கணக்கானவர்களைப் பாதித்தது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவிலிருந்தது. கிட்டதட்ட 4.5 கோடி நபர்கள் இதுவரை இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். 5 லட்சம் பேர் வரை இந்த நோய் தாக்குதல் காரணமாக மரணமடைந்தனர். 

 

இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் திரிபு ஏற்பட்டு சீனாவில் வெகு வேகமாகக் கடந்த சில நாட்களாகப் பரவி வந்தது. பலர் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இறந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைப்போல கேரளாவிலும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா சோதனை நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்